Sunday , July 22 2018
Home / Tamilnadu Police / ஆதம்பாக்கம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த வாலிபர் கைது.

ஆதம்பாக்கம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த வாலிபர் கைது.

சென்னை, ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7 வது தெரு, திவ்யதர்ஷினி பிளாட்ஸ், எண்.3 என்ற முகவரியில் வசித்து வந்த இந்துஜா, வ/21, த/பெ.சண்முகம் என்பவர் பி.டெக் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்துஜாவுடன் சேர்ந்து +2 படித்த வேளச்சேரியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் கடந்த 5 வருடமாக மேற்படி இந்துஜாவை காதலித்து வந்துள்ளார். இந்துஜா, ஆகாஷின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இந்துஜாவின் பெற்றோர் தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஆகாஷ் நேற்று (13.11.2017) இரவு 9.00 மணியளவில் மேற்படி இந்துஜா வீட்டிற்கு சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இந்துஜா மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து இந்துஜா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பினார். இந்துஜாவின் சத்தம் கேட்டு இந்துஜாவின் தாய் ரேணுகா, இந்துஜாவின் தங்கை நிவேதா ஆகியோர் இந்துஜாவை காப்பற்ற முயன்றனர், அதற்குள் தீக்காயம் அடைந்த இந்துஜா சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இந்துஜாவை காப்பாற்ற முயன்று தீக்காயம் அடைந்த தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகிய இருவரையும் அருகிலுள்ளவர்கள் மீட்டு கே.எம்.சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக இந்துஜாவின் தங்கை நிவேதா எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆகாஷ், வ/22, த/பெ.முத்துகுமார், எண்.12, பாண்டிதுரை தெரு,காமராஜபுரம், வேளச்சேரி என்பவரை இன்று (14.11.2017) கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் பி.சி.ஏ படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வேலை இல்லாமல் சுற்றி திரிந்துள்ளது விசாரணையில் தெரியவருகிறது. அவரிடமிருந்து யமஹா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *