Thursday , December 20 2018
Home / Tamilnadu Police / ஆட்டோவில் தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்த

ஆட்டோவில் தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்த

சென்னை-39, வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 3வது தெரு, எண்.15, முத்துராஜ், வ/65, த/பெ.சுந்தரம் என்பவர் சொந்தமாக ஆட்டோ (பதிவு எண். கூசூ05 ஹஹ 9246) ஓட்டி வருகிறார். முத்துராஜ் இன்று (09.3.2018) காலை சுமார் 08.30 மணியளவில் மேற்படி அவரது ஆட்டோவில் இளம்பெண் மற்றும் சிலரை சவாரியாக ஏற்றிக்கொண்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் இறக்கிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆட்டோவின் பின் பகுதியில் ஒரு கருப்பு நிற பை இருந்தது தெரியவந்தது. உடனே பையை திறந்து பார்த்ததும், அதில் ரூ.14,500/- பணம், வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் மருத்துவமனை சான்றுகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்தது.

உடனே, ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் மேற்படி பையை எடுத்துக் கொண்டு, காவல் ஆணையரகத்திற்கு வந்து, உதவி ஆணையர், மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் பையை ஒப்படைத்து, நடந்தவற்றை கூறினார். உடனே, காவல் கட்டுப்பாட்டறை மூலம் ஆட்டோவில் பையை தொலைத்தது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், கு-4 ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் தங்களது பையை ஆட்டோவில் தவறவிட்டது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருப்பது தெரியவந்தது.

அதன்பேரில், ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் புகார்தாரர்களை காவல் ஆணையரகம் வரவழைத்து, ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் மூலம் புகார்தாரர்கள் அடையாளம் காணப்பட்டு மேற்படி பை அவர்களுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில், டார்ஜலிங்கைச் சேர்ந்த செல்வி. சுமன் ஹெலா, வ/23, த/பெ. க்ரிசன் ஹெலா என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது உறவினர்களுடன் சென்னை வந்து, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளதும், இன்று (09.3.2018) காலை முத்துராஜ் ஆட்டோவில் பயணம் செய்து, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனை அருகே இறங்கி செல்லும்போது, தனது பையை எடுக்காமல் மறந்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

அதன்பேரில், சுமன் ஹெலா தவறவிட்ட பை ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் வசம் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட பையை காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜின் நேர்மையை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.