Monday , February 19 2018
Home / Spiritual / ஆடிப்பூர விழா சக்தி பீடம்

ஆடிப்பூர விழா சக்தி பீடம்

தூத்துக்குடி மூன்றாவது மைல் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள ஸ்ரீ சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
ஆடிப்பூர விழாவில் முதல் நாள் இரவு 7.00 மணியளவில் கலச, விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சக்தி பீட சக்திகள், அவரவா;கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனர். சக்திகள் அம்மனுக்கு சீர்வரிசையை எடுத்து ஊர் சுற்றி கொண்டு வந்தனர். மதியம் 12.00 மணிக்கு காய்கறி அலங்காரத்துடன் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. சக்திகளுக்கு வளையலும், பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு மாவிளக்கு, அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
மூன்றாம் நாள் காலை 6.00 மணிக்கு சக்திகள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்சுற்றி வந்து அம்மனுக்கு படைத்தனர். மதியம் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு அம்மனுக்கு சக்திகள் பொங்கலிட்டு வழிபட்டனர். அதன்பின் பக்தர்கள் அனைவரும் அம்மனுக்கு  பூச்சொரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சக்திபீட நிர்வாகி த. இந்திராணி செய்திருந்தார்.

About Admin

Check Also

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தர்மபுரி கோட்டை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *