Friday , August 17 2018
Home / Occasions-The-Week / ஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது.

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய ஆடி மாத விழா, கடந்த 21ம் தேதி தொடங் கியது. 21-ம் தேதி பிரதோஷம், 23-ம் தேதி ஆடி அமாவாசையை யொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பால திரிபுரசுந்தரி கோலத்தில் பக்தர்களுக்கு காட் சியளித்தார். கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ, ஜாக்கெட், தாலிக்கயிறு ஆகியவற்றை அம்மனுக்கு அளித்து வழி பட்டனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய் யப்பட்டது. பெண்களே அம்மனுக்கு ஆரத்தி எடுத்தனர். இதையடுத்து கல்யாண காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ ரேனுகாம்பாளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

About Admin

Check Also

467th ANNUAL FEAST OF SH​RIN​E OF OUR LADY OF HEALTH, LITTLE MOUNT, CHENNAI. 19TH APR TO 29TH APR 2018.

The Shrine of our lady of Health located at Little Mount, Saidapet, Chennai on the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.