Tuesday , June 25 2019
Home / Tamilnadu Police / ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மேற்படி மாணவி கவிதாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மேற்படி செல்வம் பள்ளி மாணவி கவிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்துள்ளார். இது குறித்து மாணவி கவிதா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் POCSO (Protection of Children
from Sexual Offences Act- 2012) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து, மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்த செல்வம், வ/27, த/பெ.உதயகுமார், எண்.10, அகஸ்தீஸ்வரர் கோயில் தெரு, வில்லிவாக்கம் என்பவரை நேற்று (14.04.2018) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.