Tuesday , November 20 2018
Home / District-News / ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான ‘சர்வதேச அழகன், அழகி போட்டி’யின் முதல்நிலைத் தேர்வு

ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான ‘சர்வதேச அழகன், அழகி போட்டி’யின் முதல்நிலைத் தேர்வு

ஆசியாவின் மிகப் பெரிய நிகழ்ச்சியான ‘சர்வதேச அழகன், அழகி தேடல் போட்டிள் 2018’-ன் (International Iconic Model Hunt 2018, for MR, MS and MRS Asia 2018) முதல்நிலைத் தேர்வு சென்னை – தியாகராய நகர், ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் ஏப்ரல் 15, 2018 (ஞாயிறு) அன்று காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டி முதல்முறையாக சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

“மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அளவில் நடைபெறும் இப்போட்டியில் திறன்மிக்க இந்திய இளைஞர்களும், இளம் பெண்களும் உலகளவில் தங்களை வெளிபடுத்திக் கொள்ளவும், தங்களுக்குள் மறைந்துள்ள திறன்களை வெளிக்காட்டவும் வாழ்நாள் வாய்ப்பாக இப்போட்டிகள் அமையும்” என்று இன்டர்நேஷனல் ஐகானிக் ஃபெடரேஷன் (International Iconic Federation) அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் முகமது நகமான் லத்தீப் (Mohammed Nagaman Lateef) தெரிவித்தார்.

“மிஸ்டர் ஆசியா, மிஸ் ஆசியா 2018 (Mr. Asia, Ms. Asia 2018) தெரிவுப் போட்டிகளில் 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளலாம். மிஸஸ் ஆசியா 2018 (Mrs. Asia 2018) போட்டியில் 22 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான தொடக்கநிலை தகுதி தெரிவு போட்டிகள் இந்தியாவின் பெரு நகரங்களான சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூரூ, கொல்கத்தா, கோவா, கொச்சி, சண்டிகர், லக்னோ, போபால், ஜெய்ப்பூர் ஆகிய மாநகரங்களில் நடைபெறும்.

ஒவ்வொரு மாநகரத்திலிருந்தும் முதலிடம் பெறுபவர் இந்திய அளவிலான அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவர். மிஸ்டர், மிஸ், மிஸஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் துபாய், பக்ரைன், ஜோர்டான் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்களுடனும் இலங்கை, நேபாள், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் வெற்றியாளர்களுடனும் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

மேற்குறித்த மூன்று பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று விருதுக்கு தகுதி பெறுவோருக்கு அழகுமிகு நாடுகளுக்கு சுற்றுலா பயணம், கவின்மிகு வண்ண நாள்காட்டிகளில் படம் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவை பாராட்டு பரிசாக அளிக்கப்படும். மேலும், உலக அளவிலான அரங்குகளில் தங்கள் திறன்களை வெளிக்காட்டுவதற்கு அரிதான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும்” என்று இன்டர்நேஷனல் ஐகானிக் ஃபெடரேஷன் அமைப்பின் பொது மேலாளர் வால்டர் சி. மின்னி (Walter C Mennie) தெரிவித்தார்.

ஹீரா குழுமத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான நொவேரா ஹேக் (Nowhera Shaik) இந்த மாபெரும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் ஆற்றல்மிகு தூணாக செயல்படுவதாக லத்தீப் மேலும் தெரிவித்தார்.

இப்போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் +91 91720 83773 / 99403 53773 அல்லது [email protected] என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

About Admin

Check Also

NIVEDITA WOMEN DEVELOPMENT & WELFARE ORGANIZATION & LIONS CLUB OF SOUTH MADRAS

DRAWING & PAINTING COMPETITION NIVEDITA WOMEN DEVELOPMENT AND WELFARE ORGANIZATION .& LIONS CLUB OF SOUTH …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.