Saturday , January 20 2018
Home / District-News / அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு பிரமலை கள்ளர் எழுச்சி பாசறை ஆதரவு

அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு பிரமலை கள்ளர் எழுச்சி பாசறை ஆதரவு


சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கட்சியின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் T.T.V. தினகரன் அவர்களுக்கு பிரமலை கள்ளர் எழுச்சி பாசறை ஆதரவு தெரிவிக்கிறது. அவரது வெற்றிக்கு அயராது பாடுபட்டு 50,000 வாக்குக்கு மேல் அதிகம் பெற்று அவரை வெற்றி பெற செய்வது என்றும், சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சார குழு அமைத்து செயல்படுவோம் மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் இருந்த முதலமைச்சர் பதவியில் ளி.பன்னீர்செல்வம் அவர்களை வைத்து அழகு பார்த்தார். ஆனால் அம்மா அவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி அவர்கள் அரும்பாடுபட்டு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்த அ.இ.அ.தி.மு.க கட்சியின் தமிழக அட்சியை கலைக்க தீயசக்திகளுடன் சேர்ந்து சதி வேலை செய்யும், அ.இ.அ.தி.மு.க கட்சியின் பெரும்பான்மை ஆட்சிக்கு துரோகம் செய்யும் ளி.பன்னீர்செல்வத்திற்கு தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி காட்ட தீர்மானிக்கப்பட்டது

About Ragavendhar

Check Also

Forum Rocks LIVE with Karthik Iyer

The concert will feature Karthik Iyers own unique style of music called IndoSoul. Karthik Iyer …