Saturday , January 20 2018
Home / Tamilnadu Police / அரும்பாக்கம் பகுதியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த நபர் கைது .

அரும்பாக்கம் பகுதியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த நபர் கைது .

சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, ‘இ’ பிளாக், எண்.142 என்ற முகவரியில் வெங்கடேசன் வ/42, த/பெ.பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று (26.12.2017) காலை சுமார் 10.30 மணியளவில் மேற்படி கடைக்கு வந்த நான்கு நபர்கள், வெங்கடேசனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.650/-ஐ பறித்துச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வெங்கடேசன் கே-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கே-8 அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட பலராமன், வ/25, த/பெ.வேலு, எண்.23, தாஸ்புரம் மெக்கானிக்கல் ரோடு, சேத்துப்பட்டு என்பவரை கைது செய்தனர். மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பலராமன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

29th road safety week-2018 signature Camp.

Chennai 2018: 29th road safety week-2018 signature Campaign held at anna salai Spencer’s junction. The …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *