Thursday , February 22 2018
Home / District-News / அய்யா வைகுண்டரின் பிறந்த தினமான மாசி 20 தேதி விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை

அய்யா வைகுண்டரின் பிறந்த தினமான மாசி 20 தேதி விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை


தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியவிற்கே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கி நாடான். இடையன்
வணிகன், துலுக்கப்பட்டர், சூத்திரப்பிராமன் தோல்வாணியன், பறயன், சும்மாளன், ஈளன், கருமறவன்,
பரவன், சக்கிலியன், போன்ற பதினெட்டு ஜாதிகளுக்கா அனைத்து மக்களும் சமமே என போராடி
மக்களை ஒன்று படுத்தினார்.
சமத்துவ சமாஜம் எனும் மக்கள் இயக்கத்தை துவக்கி சமவத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு என அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைத்திட சமபந்தி விருந்து, சமத்துவ குடில், சமத்துவ குளியல் என பல புரட்சிகர திட்டங்களை அனைத்து ஜாதினரையும் ஒன்றினைப்பதற்காக உருவாக்கி ஒற்றுமையை ஏற்ப்படுத்தினார்.
கோவில்களில் உயிர்பலி கூடாது, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என ஏற்ற இறக்கங்களை தவிர்த்திட ஏற்படுத்திய புரட்சியாளார் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் கருத்துகள் உலக முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் அய்யா வழியை பின் பற்றுகின்றனர். அவரது அவதார தினமான மாசி மாதம் 20&ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி என மூன்று மாவட்டங்களில் மட்டுமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் அய்யா வழி பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக முழுவதும் அய்யா அவதார தினமான மாசி மாதம் 20ம் தேதி பொது விடுமுறை வழங்க வேண்டும்.
அன்பு வழியை போதித்த அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று ஆடு, மாடு,கோழி போன்ற உயிர் பலிகளை தடையை செய்ய வேண்டும் மனிதர்களின் ஆறாவது அறிவை இழக்க வைக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் அய்யாவைகுண்டரின் போதனைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பாடமாக வைக்ககும் மதுபான கடைகளை மூட வேண்டும்

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டரின் போதனைகள் , வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பாடமாக வைக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ் நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறோம்.

About Ragavendhar

Check Also

சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்

கோவை துடியலூர் வி.ஜி.மருத்துவமணை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் …