Friday , October 19 2018
Home / Tamilnadu Police / அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது. 13 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது. 13 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

 

சென்னை, அயப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, எண்.37 என்ற முகவரியில் கோபாலகண்ணன், வ/30, த/பெ.ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (12.11.2017) இரவு 7.15 மணியளவில் மண்ணூர்பேட்டை, பாண்டியன் ஹோட்டல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த 4 நபர்கள் மேற்படி கோபாலகண்ணனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.400 பறித்துச்சென்றனர். இது தொடர்பாக கோபாலகண்ணன் டி-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
டி-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சதீஷ், வ/25, த/பெ.அபிமன்யூ, நொச்சிக்குப்பம் 2. சின்னசிவா (எ) சிவா, வ/19, த/பெ.பன்னீர் செல்வம், நொச்சிக்குப்பம் 3. சிவா, வ/20, த/பெ.பிரகாஷ், நொச்சிக்குப்பம் 4.சூர்யா, வ/19, த/பெ.விஜயகுமார், நொச்சிக்குப்பம் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் சேர்ந்து அம்பத்தூர், கொரட்டூர் காவல் நிலைய எல்லைகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது விசாரணையில் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் இன்று (13.11.2017) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.