Wednesday , September 26 2018
Home / Tamilnadu Police / அமைந்தகரை பகுதியில் குடிபோதையில் நண்பரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

அமைந்தகரை பகுதியில் குடிபோதையில் நண்பரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, அமைந்தகரை, சுண்ணாம்பு கல்வாய் தெரு, கதவு எண்.5/2 என்ற முகவரியில் குமார், வ/27, த/பெ.பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் துரித உணவகத்தில் வேலை செய்து வருகிறார். குமார் நேற்று (19.10.2017) இரவு அதே பகுதியில் சிக்கன் பக்கோடா கடையில் வேலை செய்து வரும் தனது நண்பர் பாபுஜி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.குடிபோதையில் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் பாபுஜி கத்தியால் மேற்படி குமாரின் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குமார் கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கே-3 அமைந்தகரை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்ட பாபுஜி, வ/29, த/பெ.இக்பால், சுண்ணாம்பு கல்வாய் தெரு, அமைந்தகரை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாபுஜி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.