Monday , June 26 2017
Home / Astrology / அதிர்ஷ்ட கற்களை எப்படி அணிய வேண்டும்

அதிர்ஷ்ட கற்களை எப்படி அணிய வேண்டும்

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வந்தார். அவர் தன் ஜாதகத்தை என்னிடம் காட்டி பல பிரச்சினைகளை சொன்னார். நான் அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பலன் கூறினேன். அவர் அனைத்தும் உண்மை தான் ஆனால் எனக்கு என்ன பரிகாரம் சொல்வீர்கள் என்றார். நான் அவர் கையில் அணிந்து இருந்த மரகதக்கல் மோதிரத்தை அவிழ்த்து கோயில் உண்டியலில் போடுமாறு கூறினேன். அவர் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் நீங்கள் மிதுன ராசி அதற்குரிய கல் அணிந்துள்ளீர்கள் ஆனால் அதன் அதிபதி புதன் உங்கள் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் உள்ளார்.

ஒருவர் ஜாதகத்தில் 12&ஆம் இடம் தடைகள், வீண் விரயம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அந்த இடத்தில் உள்ள புதன் அந்த வேலையை செய்யும். அதனால் அதற்கு உரிய கல்லை நீங்கள் அணிந்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும். அதனால் தான் கூறுகிறேன் என்றேன். அவர் நான் மிகவும் விலை கொடுத்து வாங்கி உள்ளேன் என்றார். நான் நீங்கள் இதுவரை எவ்வளவு இழந்து இருக்கிறீர்கள் என்றேன். அவர் பல இலட்சங்கள் என்றார். இது சில ஆயிரங்கள் தான் என்றேன். அவர் நான் என்ன அணிய வேண்டும் என்றார். நீங்கள் கனகபுஷ்பராகம் அணியுங்கள் அது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும், லாபம் தரும் நீங்கள் இழந்தவற்றைப் படிபடியாக அடைவீர்கள் என்றேன். அவர் சரி என்று கூறிச் சென்று விட்டார். சில தினங்கள் கழித்து எனக்கு போன் செய்து நீங்கள் கூறியது சரிதான் என்று கூறி இப்போது தொழில் சிறப்பாக நடக்கிறது என்றார். நாம் நம் அதிர்ஷ்ட ரத்தினங்கள் அணியும்போது நம் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கல் அணிந்தால் நமக்கு அதிர்ஷ்டம், லாபம், வெற்றி கிடைக்கும்.

பிரசன்ன ஜோதிடர் எஸ்.ஆனந்தன்

7502666111

 

IMG-20170312-WA0002

About Ragavendhar

Check Also

திரு மந்திரம் அருளிய திருமூலர் அவதார ஸ்தலத்தில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிசேக விழா

திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூல சித்தர் அவதார தலமான 69 சாத்தனுார் கிராமத்தில் அமையபெற்றுள்ள …