Tuesday , September 25 2018
Home / Tamilnadu Police / அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறாக நடக்க முயன்ற தனியார் காவலாளி கைது.
OLYMPUS DIGITAL CAMERA

அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறாக நடக்க முயன்ற தனியார் காவலாளி கைது.

சென்னை, அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 2வது மெயின் ரோடு, சாய் தர்ஷன் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மகள் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வ/23, என்பவருடன் வசித்து வருகிறார். ஜானகியின் கணவர் வெளியூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காயத்ரி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று (02.3.2018) இரவு 09.30 மணியளவில் வீட்டில் காயத்ரி இருந்தபோது, ஜானகி அப்பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது, கதவை திறக்காமலும், வீட்டிலிருந்து அலறல் சத்தமும் கேட்டதால், ஜானகி சத்தம்போட்டு, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தனியார் காவலாளி சீருடையிலிருந்த சுமார் 25 வயதுடைய வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் வீட்டிலிருந்து வெளியே தப்பிச் செல்ல முயன்றார். உடனே, அருகிலிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து து-2 அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டில் தலையில் காயமடைந்த நிலையிலிருந்த காயத்ரியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடையாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரவிசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் நிர்பவ்குமார் யாதவ், வ/27, த/பெ.சத்ரவத் யாதவ், நாலந்தா மாவட்டம், பீகார் மாநிலம் என்பதும், அடையாறிலுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மதுபோதையில் மேற்படி வீட்டில் புகுந்து திருட முயன்றதாகவும், அப்போது திருட்டை தடுக்க முயன்ற காயத்ரியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டதும் தெரியவந்தது.
அதன்பேரில், குற்றவாளி நிர்பவ்குமார் யாதவ், வ/27, கைது செய்யப்பட்டு, இன்று (03.3.2018) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.